ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது
ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று மீனவர்கள் நேற்று மாலை பேருவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 73.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.