பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி; குழம்புகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி; குழம்புகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔5.May 2017

அரசியல் ரீதியிலானதொரு முடிவினை சர்வதேச வெசாக் தினத்தின் பின்னர், தான் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விஜேதாஸ ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, அரசியல் முடிவொன்றினை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும்

மேலும்...
அமெரிக்க குடியுரிமையை இழக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ திட்டவட்டம்

அமெரிக்க குடியுரிமையை இழக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ திட்டவட்டம் 0

🕔5.May 2017

அமெரிக்க குடியுரிமையை தான் இழக்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இதனைத் கூறியுள்ளார். இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமைகளை பசில் ராஜபக்ஷ கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ராஜபக்ஷகளை அரசியலிலிருந்து ஒதுக்கும் நோக்கத்துடனேயே 19ஆவது திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் இதன்போது பசில்

மேலும்...
கெஹலிய மகன் திருமண நிகழ்வில், கலக்கியது ராஜபக்ஷ குடும்பம்

கெஹலிய மகன் திருமண நிகழ்வில், கலக்கியது ராஜபக்ஷ குடும்பம் 0

🕔5.May 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவினுடைய மகனின் திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தாரும் பங்கேற்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல – நட்டாலி ஆகியோருக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள்

மேலும்...
சற்சொரூபவதி நாதனின் செய்தி வாசிப்பில் தனியான பாணி இருந்தது: அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: அமைச்சர் றிசாத் பதியுதீன்

சற்சொரூபவதி நாதனின் செய்தி வாசிப்பில் தனியான பாணி இருந்தது: அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔5.May 2017

இலங்கையின் செய்தித்துறை வரலாற்றில் பல ஜாம்பவான்களை உருவாக்கிய மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதனின் மறைவு, ஒலிபரப்புத்துறையில் ஈடு செய்ய முடியாததென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சற்சொரூபவதி நாதனின்ம றைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது; சற்சொரூபவதி நாதன் பன்முக புலமை கொண்ட ஒர் ஒலிபரப்பாளர்.

மேலும்...
அனைவருக்கும் மலசல கூடம்; சர்வதேசத்தின் கால இலக்கை, இலங்கை முந்திவிடும்: அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை

அனைவருக்கும் மலசல கூடம்; சர்வதேசத்தின் கால இலக்கை, இலங்கை முந்திவிடும்: அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை 0

🕔5.May 2017

– பர்ஸான் –உலக வங்கி மூலம் பல பாரிய வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும், அவற்றை இன்னும் பல மாவட்டங்களுக்கு விஸ்தரிக்க வேண்டிய தேவையிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உலக வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் தொடர்பாக, அதன் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும்

மேலும்...
சைட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் ஆரம்பம்; பல்வேறு துறைகள் கை கோர்த்தன

சைட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் ஆரம்பம்; பல்வேறு துறைகள் கை கோர்த்தன 0

🕔5.May 2017

‘சைட்டம்” எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரியை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 03 கோரிக்கைகளை முன்வைத்து, பல துறைகளில் இன்று காலை தொடக்கம் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக அரச மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் மேற்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், புகையிரத திணைக்களத்தின் இரண்டு தரங்களைக் கொண்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, லோகோமோட்டிவ்

மேலும்...
நோன்பு மாதத்தைக் குறி வைத்து, பேரிச்சம் பழ வரி அதிகரிப்பு: பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலா?

நோன்பு மாதத்தைக் குறி வைத்து, பேரிச்சம் பழ வரி அதிகரிப்பு: பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலா? 0

🕔5.May 2017

– அ. அஹமட் – இனவாதிகள் எதை எல்லாம் செய்ய வேண்டுமென பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவை அத்தனையும் இன்று மிக அழகிய முறையில் திட்டமிடப்பட்டு ஆட்சியாளர்களின் அங்கீகாரத்துடன் நடந்து கொண்டிருக்கின்றன.நோன்பு மாதம் வருவதை அறிந்து இந்த அரசாங்கம் பேரீச்சம் பழத்தின் மீதான வரியை அதிகரித்துள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் வைத்தே ம.வி.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பில், மு.காங்கிரஸ் அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டும்: பஷீர்சேகுதாவூத்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பில், மு.காங்கிரஸ் அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டும்: பஷீர்சேகுதாவூத் 0

🕔5.May 2017

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்தச் சட்டம் மூலம் பற்றிய தனது அபிப்பிராயத்தினைத் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர்சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்படி பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின், அது முஸ்லிம்களையே

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு: 50 பொலிஸார் மீளப் பெறப்பட்டனர்

மஹிந்தவின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு: 50 பொலிஸார் மீளப் பெறப்பட்டனர் 0

🕔4.May 2017

மஹிந்த ராஜக்சவின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க, மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய 50 பொலிஸார் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய 50 பொலிஸார் மீளப்

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான நீதிமன்றத் தீர்பு, தனக்கு அறிவிக்கப்படவில்லை என, சபாநாயகர் தெரிவிப்பு

கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான நீதிமன்றத் தீர்பு, தனக்கு அறிவிக்கப்படவில்லை என, சபாநாயகர் தெரிவிப்பு 0

🕔4.May 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு  குறித்து, தனக்கு எதுவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, சபாநாயகர் இதனைக் கூறினார். நீதிமன்றத் தீர்பு தனக்கு அறிவிக்கப்படுமாயின், அது தொடர்பில்

மேலும்...
கீதாவுக்கு வழங்கப்பட்ட வாகன வரிச் சலுகையை மீளப் பெற வேண்டும்: கபே வேண்டுகோள்

கீதாவுக்கு வழங்கப்பட்ட வாகன வரிச் சலுகையை மீளப் பெற வேண்டும்: கபே வேண்டுகோள் 0

🕔4.May 2017

வரிச் சலுகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை, அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ‘கபே’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபா நாயகர் மற்றும் திரைசேரி செயலாளர்  ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றின் மூலம், இந்தக் கோரிக்கையை கபே முன்வைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு, கீதா தகுதியற்றவர்

மேலும்...
மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது

மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது 0

🕔4.May 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கையகப்படுத்தியுள்ளார் என பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு  நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குச் சொந்தமான 110 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான

மேலும்...
வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளக் கட்டியமைக்க ஒத்துழைப்பு வேண்டும்: அமைச்சர் றிசாத் கோரிக்கை

வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளக் கட்டியமைக்க ஒத்துழைப்பு வேண்டும்: அமைச்சர் றிசாத் கோரிக்கை 0

🕔4.May 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிந்து போன தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்து மீண்டும் வினைத்திறன் கொண்ட தொழிற்சாலைகளாக அவற்றை இயங்கச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளது என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார்.இதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும்

மேலும்...
நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு 0

🕔3.May 2017

மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து தமது பரிதாப நிலையை எடுத்துரைத்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, உள்ளூர் அரசியல் முக்கியஸ்தர்களும் பள்ளிவாசல் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க, கீதாவுக்கு தகுதியில்லை: நீதிமன்றம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க, கீதாவுக்கு தகுதியில்லை: நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔3.May 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளமையின் காரணமாக , தொடர்ந்தும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. கீதா குமாரசிங்கவுக்க எதிரான இந்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி விஜித் மலல்கொடவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்