பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பில், மு.காங்கிரஸ் அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டும்: பஷீர்சேகுதாவூத்

🕔 May 5, 2017

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்தச் சட்டம் மூலம் பற்றிய தனது அபிப்பிராயத்தினைத் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர்சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்படி பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின், அது முஸ்லிம்களையே அதிகமாகப் பாதிக்கும் என்பதால், அந்த சட்ட மூலம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் என்ன அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறது என்பதை, அந்தக் கட்சி உடனே வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டியுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்திலும் பார்க்க, புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அபாயகரமானது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே, மேற்படி சட்ட மூலம் தொடர்பில், முஸ்லிம் காங்கிரசின் அபிப்பிராயமும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று பஷீர் கோரியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்