கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான நீதிமன்றத் தீர்பு, தனக்கு அறிவிக்கப்படவில்லை என, சபாநாயகர் தெரிவிப்பு

🕔 May 4, 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு  குறித்து, தனக்கு எதுவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, சபாநாயகர் இதனைக் கூறினார்.

நீதிமன்றத் தீர்பு தனக்கு அறிவிக்கப்படுமாயின், அது தொடர்பில் தன்னால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டார்.

கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமையினைக் கொண்டுள்ளமை காரணமாக, அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்குத் தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments