அமெரிக்க குடியுரிமையை இழக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ திட்டவட்டம்

🕔 May 5, 2017

மெரிக்க குடியுரிமையை தான் இழக்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இதனைத் கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமைகளை பசில் ராஜபக்ஷ கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷகளை அரசியலிலிருந்து ஒதுக்கும் நோக்கத்துடனேயே 19ஆவது திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் இதன்போது பசில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமையினைக் கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற  உறுப்பினர் பதவியினை வகிப்பதற்கு தகுதியற்றவர் என்று, அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பொன்றினை வழங்கியது.

இதற்கிணங்க பசில் ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருப்பாரானால், இலங்கைத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை அவருக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்