கெஹலிய மகன் திருமண நிகழ்வில், கலக்கியது ராஜபக்ஷ குடும்பம்
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவினுடைய மகனின் திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தாரும் பங்கேற்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல – நட்டாலி ஆகியோருக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், மஹிந்த ராஜபக்ஷவுடன் மணமக்கள் செல்பி எடுத்துக் கொண்டதோடு, ராஜபக்ஷ குடும்பத்தினரும் மண மக்களுடன் படங்களை எடுத்துக் கொண்டனர்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், கெஹலிய ரம்புக்வெல்ல முக்கிய அமைச்சராகப் பதவி வகித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.