மஹிந்தவின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு: 50 பொலிஸார் மீளப் பெறப்பட்டனர்

🕔 May 4, 2017

ஹிந்த ராஜக்சவின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிணங்க, மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய 50 பொலிஸார் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய 50 பொலிஸார் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Comments