நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு 0

🕔14.Feb 2016

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 5.22 மில்லியன் ரூபா நிதியினை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது, ஐ.ம.சு.முன்னணியை விளம்பரப்படுத்தும் வகையில் 8000 ரி – ஷேட்களை கொள்வனவு செய்து, அவற்றில் வாசகங்களை அச்சிடுமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு

மேலும்...
பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம்

பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம் 0

🕔14.Feb 2016

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியும், கனரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஆகக்குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில், பண்டாரவளை ஒத்தக்கடை ரயில் கடவைக்கு அருகில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 25 பேர் பல்கலைக்கழக மாணவிகளாவர். கனரக வாகனத்துடன் பஸ் வண்டி மோதுண்டதையடுத்து, பஸ் வண்டி

மேலும்...
கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி

கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி 0

🕔14.Feb 2016

கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டைகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணி குறித்த ஆய்வு 1984 முதல்

மேலும்...
காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி

காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி 0

🕔14.Feb 2016

காற்று மாசடைவதன் காரணமாக, உலகம் முழுவதும் வருடாந்தம் சராசரியாக 55 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக வொஷிங்டனில் உள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க சங்கம் (AAAS) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து இந்தியா, சீனா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வொஷிங்டனில் உள்ள அறிவியல்

மேலும்...
சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன்

சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் 0

🕔13.Feb 2016

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணைகள் நடத்தப்படும்போது, சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலியுறுத்தப்படவில்லை என, ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.ஆயினும், இது தொடர்பான விசாரணையானது பக்கசார்பற்றதும் சுயாதீனமானதுமாக இருக்க வேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.ரொய்டர் செய்தி நிறுவனத்துக்கான கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.இதுதொடர்பில் ஹுசைன்  மேலும் கருத்துத்

மேலும்...
ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில்

ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில் 0

🕔13.Feb 2016

மதங்களையோ இனங்களையோ அவமதிக்க கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த செயற்பாடுகளில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பதுளையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியின் கீழ் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை புதிய வழிக்கு கொண்டு

மேலும்...
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு 0

🕔13.Feb 2016

– எம்.எம். ஜபீர் –கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகளை இறக்காமம் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.இந்த நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப்  பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.எல்.நிஸார் தலைமையில் இறக்காமத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர்,

மேலும்...
கடத்தல் குற்றத்தை, தண்டனை சட்டத்தில் உள்ளடக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

கடத்தல் குற்றத்தை, தண்டனை சட்டத்தில் உள்ளடக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔13.Feb 2016

கடத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பான குற்­றத்தை தண்­டனைச் சட்­டத்தில் கொண்டு வந்து, அந்தக் குற்றத்துக்கு தண்­டனை வழங்கப்­பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும், அமைச்­ச­ரு­மான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரி­வித்தார். வடக்கு, கிழக்கில் காணா­மல் போனோருக்கு மரணச் சான்­றி­தழ்கள் வழங்­கு­வது தொடர்­பாக, சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்­திக பத்­தி­ரண முன்­வைத்த தனி­நபர் பிரே­ரணை மீதான விவா­தத்தில்

மேலும்...
மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம் 0

🕔13.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால கோபத்துடன் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே ஜனாதிபதி இப்படிக் கூறினார். இந்த கூட்டத்தில் மஹிந்த தரப்பினர் ஆரம்பிக்கவுள்ள

மேலும்...
பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப்

பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப் 0

🕔13.Feb 2016

அதிபர் நியமனங்களின் போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவானதொரு தீர்மானத்தைக் கடைப்பிடிக்காமல், பாகுபாட்டின் அடிப்படையில் செயற்படுவதை, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினர் கைவிட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் போது, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கடைப்பிடித்து வரும் பாகுபாடான நடவடிக்கையினைக் கண்டித்து, நாடாளுமன்ற

மேலும்...
வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’

வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ 0

🕔13.Feb 2016

– ஏ.எல். ஆஸாத்: சட்டக்கல்லூரி –‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ எனும் தலைப்பில், வசந்தம் தொலைக்காட்சியில் இன்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.வசந்தம் தொலைக் காட்யியில் ஒளிபரப்பாகும் ‘பள்ளிக்கூடம்’ நிகழ்ச்சியில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் ஏ. சர்வேஷ்வரன், நாடாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் நல்லாட்சிக்கான

மேலும்...
ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை

ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை 0

🕔12.Feb 2016

பாடசாலை ஆசிரியை ஒருவரை முழுகாலில் நிற்க வைத்தார் எனும் குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவை, அதே பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைத்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு, கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை

மேலும்...
வட மாகாண ஆளுநராக ரெஜிரோல் கூரேயை நியமிப்பது குறித்து ஆட்சேபனையில்லை: சிவாஜிலிங்கம்

வட மாகாண ஆளுநராக ரெஜிரோல் கூரேயை நியமிப்பது குறித்து ஆட்சேபனையில்லை: சிவாஜிலிங்கம் 0

🕔12.Feb 2016

வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் கூரேயை அரசாங்கம் நியமிப்பது தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லையென, வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஏனெனில், ரெஜினோல்ட் கூரே – அனுபவம் வாய்ந்த ஓர் அரசியல்வாதி என்றும் அவர் குறிப்பிட்டார். இருந்தபோதும், வட மாகாணத்தின் ஆளுநராக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவரை நியமிப்பதையே, தாம் பெரிதும்

மேலும்...
தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை 0

🕔12.Feb 2016

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவத்தினை நீக்குமாறு, அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவினரிடம் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில், பொதுமக்களின் கருத்தறியும் வகையில் மேற்படி குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் கூடியபோது, பெண்கள் அமைப்பொன்று இந்த முன்மொழிவினை சமர்ப்பித்தது. தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவமானது இலங்கையிலுள்ள சிங்கவர்களை மட்டுமே

மேலும்...
தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு 0

🕔12.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ். பிரிவு (S Ward) தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைத் தீர்ப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைப்பதற்காக எஸ். பிரிவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவில் முக்கிய பிரமுகர் ஒருவர் சிறை வைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும், அதனை முன்னிட்டே எஸ். பிரிவு புனரமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வெலிக்கடை சிலைச்சாலையின் எஸ். பிரிவில் முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்