ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில்

🕔 February 13, 2016
Ranil - 012தங்களையோ இனங்களையோ அவமதிக்க கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடுகளில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியின் கீழ் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை புதிய வழிக்கு கொண்டு செல்கின்றோம்.

இதனடிப்படையில், முதலீட்டாளர்கள் புதிய வர்த்தகங்களை ஆரம்பித்து வருகின்றனர்.

ஹம்பாந்தோட்டையில் புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் பலாபலன் மொனராகலைக்கும் கிடைக்கும். பதுளை மக்கள் தகவல் தொழிற்நுட்பத்தின் பயனை பெறும் சூழல் உருவாக்கப்படும்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. மக்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை கோரினர்.

மக்கள் முன்னைய அரசாங்கத்தை போல் அல்லாது, புதிதாக சிந்திக்கும் அரசாங்கத்தை எதிர்பார்த்தனர்.

இதனடிப்படையில் மக்களுக்கு பணியாற்றுவது எனது கடமை. ஜனநாயகம், ஊழல் சம்பந்தமாக சர்வதேசத்தில் இலங்கை அதிருப்தியை எதிர்நோக்கியது. இதிலிருந்து நாட்டை மீட்க தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

குறிப்பாக சகல இனங்களுடனும் அமைதியான நிர்வாகத்தை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் நோக்கம்.

தேசிய கீதத்தை தமிழில் பாட சந்தர்ப்பம் வழங்கியமை முக்கியமான நடவடிக்கை. அதேபோல் நாட்டின் பெண்கள் அரசியலில் ஈடுபட இடமளிக்கும் முகிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 74 வீத பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதும் அதிகரிக்கப்படும். இது தொடர்பான திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட போது, ராஜபக்ஷ கோஷ்டியினர் நாடாளுமன்றத்தின் சபைக்கு நடுவே வந்து தடைகளை ஏற்படுத்தினர்.

இதன் மூலம் ராஜபக்ச கோஷ்டிக்கு நாட்டு பெண்கள் மீது உண்மையாக அக்கறையில்லை என்பது தெரியவந்தது. ராஜபக்ச கோஷ்டியினருக்கு பெண்களின் உரிமைகள் தொடர்பில் எவ்விதமான அக்கறையுமில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்