பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம்

🕔 February 14, 2016

Accident - 012ப்ரகமுவ பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியும், கனரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஆகக்குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர்.

பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில், பண்டாரவளை ஒத்தக்கடை ரயில் கடவைக்கு அருகில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் 25 பேர் பல்கலைக்கழக மாணவிகளாவர்.

கனரக வாகனத்துடன் பஸ் வண்டி மோதுண்டதையடுத்து, பஸ் வண்டி தடம்புரண்டுள்ளது.

இரண்டு வாகனங்களின் சாரதிகள் உட்பட காயமடைந்தவர்கள் அனைவரும் தியத்தலாவ மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பல்கலைக்கழக மாணவியர் இருவரின் நிலை, சற்று கவலைக்கிடமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்