தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை

🕔 February 12, 2016

Constitutional Reforms Committee - 012தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவத்தினை நீக்குமாறு, அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவினரிடம் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில், பொதுமக்களின் கருத்தறியும் வகையில் மேற்படி குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் கூடியபோது, பெண்கள் அமைப்பொன்று இந்த முன்மொழிவினை சமர்ப்பித்தது.

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவமானது இலங்கையிலுள்ள சிங்கவர்களை மட்டுமே குறிப்பிடுவதாக, மேற்படி பெண்கள் அமைப்பு இதன்போது வாதிட்டது.

எனவே, அனைத்துச் சமூகங்களையும் குறிக்கும் வகையிலான இலச்சினை ஒன்றினை, சிங்கத்தின் உருவத்துக்குப் பதிலாக, தேசியக் கொடியில் அமைக்க வேண்டுமென்றும் மேற்படி  பெண்கள்அமைப்பு கோரிக்கை விடுத்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்