தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

🕔 February 12, 2016

Welikada Prison - 01வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ். பிரிவு (S Ward) தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைத் தீர்ப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைப்பதற்காக எஸ். பிரிவு பயன்படுத்தப்படுகிறது.

மிக விரைவில் முக்கிய பிரமுகர் ஒருவர் சிறை வைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும், அதனை முன்னிட்டே எஸ். பிரிவு புனரமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வெலிக்கடை சிலைச்சாலையின் எஸ். பிரிவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கணவர் விஜய குமாரதுங்க, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் முன்னர் சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments