நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம் 0
நுரைச்சோலை நிலக்கரி மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், அப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் இலங்கை மின்சாரத்துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக, அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் அனல் மின்சார உற்பத்தி