மஹிந்தவின் வெங்காய அரசியலால், அரசுக்கு பல கோடி நஷ்டம்: விசாரணைகளில் அம்பலம்

🕔 April 20, 2017

ஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்காக, அறுபது ரூபாய் பெறுமதியுடைய பெரிய வெங்காயத்தினை, உள்ளுர் விவசாயிகளிடமிருந்து 90 ரூபாய்க்கு கொள்வனவு செய்தமையின் மூலம், கடந்த ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் அரச நிதி, நஷ்டப்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்க, 188 கோடி ரூபா செலவிடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்திரவிடம் பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை விசாரணை நடத்தியுள்ளது.

அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் கொள்வனவு செய்த, டொன் கணக்கான பெரிய வெங்காயத்தை களஞ்சியப்படுத்த முடியாமை காரணமாக, அவை பழுதடைந்து போனதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கான பணம் நிதியமைச்சின் முன்னாள் செயலாளரால் ஒதுக்கப்பட்டது.

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 60 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு பீ.பி. ஜயசுந்தர உத்தரவிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிகளவான விவசாயிகள் தமது பெரிய வெங்காய உற்பத்தியை அரசாங்கத்துக்கு விற்பனை செய்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளை பெறுவதற்காக, அவர்களின் மனங்களை கவரும் வகையில் அதிக விலைக்கு வெங்காயம் கொள்வனவு செய்யப்பட்டதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் 10 மணிக்கு ஆஜரான பீ.பி. ஜயசுந்தரவிடம் பிற்பகல் 02 மணி வரை விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்