புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு

🕔 April 26, 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு இவ்வருடம் நடத்தப்படும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கம் 2017ஆம் ஆண்டு எதிர்கொள்ளும் முதலாவது தேர்தலாக மேற்படி பொது அபிப்பிராய வாக்கெடுப்பு அமையும் என்றும் அவர் கூறினார்.

புதிய அரசியல் யாப்பினை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, அதற்கான அங்கீகாரத்தினை ஒரு தடவை பெற்றுக் கொண்ட பின்னர், பொதுமக்களின் அபிப்பிராயத்தினை அறிந்து கொள்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

இதனையடுத்து  மாகாண சபைகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும். பின்னர், உள்ளுராட்சி மன்றங்களுங்கு ஒரு தினத்தில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்