குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி

🕔 April 22, 2017

– க. கிஷாந்தன் –

தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியமையினால், 11 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலவாக்கல ஒலிரூட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களையே, குளவிகள் கொட்டியுள்ளன. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரும் பெண் தொழிலாளர்களாவர்.

குறித்த 11 பேரும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளவித் தாக்குதலுக்கு இவ்வாறு அடிக்கடி தோட்டத் தொழிலாளர்கள் இலக்காகி வருகின்றனர்.

குளவித் தாக்குதல் காரணமாக, மரணம் சம்பவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்