Back to homepage

மேல் மாகாணம்

ஐந்து மாதங்களின் பின்னர், றியாஜ் பதியுதீன் விடுவிப்பு

ஐந்து மாதங்களின் பின்னர், றியாஜ் பதியுதீன் விடுவிப்பு 0

🕔30.Sep 2020

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த – முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் இளைய சகோதரர் றியாஜ் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 05 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம்

மேலும்...
இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம்

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔29.Sep 2020

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். மிக நீண்ட காலமாகவே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை தடை செய்ய வேண்டும் எனும் கோஷம், பெரும்பான்மையின கடும் போக்காளர்களால் எழுப்பப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினுள்ளும் –

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு எதிராக மு.காங்கிரஸ் சார்பில் 02 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல்

20ஆவது திருத்தத்துக்கு எதிராக மு.காங்கிரஸ் சார்பில் 02 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் 0

🕔28.Sep 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மனுவை – கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம் ஆகியோர் சார்பில் கட்சியின் செயலாளர்

மேலும்...
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சுஜீவ சேனசிங்க அறிவிப்பு 0

🕔28.Sep 2020

அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார். அத்தோடு கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்டதில் போட்டியிட்ட சுஜீவ சேனசிங்க தோல்வியடைந்தார். இதனையடுத்தே, அரசியலில் இருந்து விலக முடிவு

மேலும்...
வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்: ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔28.Sep 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபையின் ஆளுநருமான ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் போது, தேசியப்பட்டியல் ஊடாக தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ உறுதியளித்திருந்த போதும், பின்னர் அந்த வாக்குறுதியை

மேலும்...
முஸ்லிம்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்துடன் செயற்படுகிறார்: மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்துடன் செயற்படுகிறார்: மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் குற்றச்சாட்டு 0

🕔28.Sep 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், முஸ்லிம்கள் விவகாரத்தில் இரட்டை முகத்தினைக் காட்டுவதாக, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார். முஸ்லிம் சமூகத்தினை தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுவதற்கான கருவியாக சில அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சாய்ந்தமருதில் நேற்று ஞாயிறுக்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில்

மேலும்...
திங்கட்கிழமை அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் இல்லையா: அமைச்சுக்கு அறிவியுங்கள்

திங்கட்கிழமை அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் இல்லையா: அமைச்சுக்கு அறிவியுங்கள் 0

🕔28.Sep 2020

பொதுமக்கள் தினமாக அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. சில அரச நிறுவனங்களில் திங்கட்கிழமையன்று அதிகாரிகள் இல்லாமையினால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்கள் தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பான அமைச்சுக்கோ அல்லது தமது அமைச்சுக்கோ

மேலும்...
‘கொச்சை’ தமிழ் பேசுவோருக்கு வசந்தம் செய்திப் பிரிவில் தொடர்ந்தும் முன்னுரிமை: காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும்

‘கொச்சை’ தமிழ் பேசுவோருக்கு வசந்தம் செய்திப் பிரிவில் தொடர்ந்தும் முன்னுரிமை: காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும் 0

🕔26.Sep 2020

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் தமிழை சரியாக உச்சரிக்க முடியாதவர்களுக்கே தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்பதை, நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த போதும், அதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு வழங்கும் ‘சுயாதீன செய்திப்பார்வை’ எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றவர்களில் அதிகமானோருக்கு – தமிழை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்?

ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்? 0

🕔26.Sep 2020

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது – தெஹிவளையிலுள்ள ‘ட்ரப்பிக் இன்’ எனும் உணவு விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபர், அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், அரச புலனாய்வு அதிகாரி ஒருவரை சந்தித்தார் என்று, தற்போது கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஈஸ்டர்

மேலும்...
தமிழைக் குதறும் வசந்தம் செய்தி: தமிழ் பிரிவுக்கு சிங்களவர் நியமனம்: அமைச்சரே கொஞ்சம் கவனியுங்கள்

தமிழைக் குதறும் வசந்தம் செய்தி: தமிழ் பிரிவுக்கு சிங்களவர் நியமனம்: அமைச்சரே கொஞ்சம் கவனியுங்கள் 0

🕔24.Sep 2020

– அஹமட் – அரசுக்குச் சொந்தமான ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தி அறிக்கையிலும், வசந்தம் செய்திப் பிரிவு வழங்கும் ‘சுயாதீன செய்திப் பார்வை’ நிகழ்ச்சியிலும் – அண்மைக்காலமாக தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படுவதைக் காண முடிகிறது. இவ்வாறு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள், செய்தி வாசிப்பின் போதும், சுயாதீன செய்திப் பார்வை

மேலும்...
இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு

இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு 0

🕔24.Sep 2020

புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை, மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கூறினார். தேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை கையளித்த

மேலும்...
அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து

அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து 0

🕔23.Sep 2020

எந்தவித எழுத்து ஆவணங்களும் இன்றி அரச காணிகளில் வசிப்போருக்கு அல்லது அபிவிருத்தி செய்துள்ளவர்களுக்கு சட்டபூர்வ காணி உரித்து வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹேரத் வெளியிட்டுள்ளார். காணி உரித்து வழங்குவதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல், காணி ஆணையாளர் நாயகத்தின்

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில், சஜித் அணி மனுத் தாக்கல்

20ஆவது திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில், சஜித் அணி மனுத் தாக்கல் 0

🕔23.Sep 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்துள்ளது. இதேவேளை, 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று

மேலும்...
அதாஉல்லாவுக்கு முன்னர், ஆடை விவகாரம்: வாங்க கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்

அதாஉல்லாவுக்கு முன்னர், ஆடை விவகாரம்: வாங்க கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம் 0

🕔23.Sep 2020

நாடாளுமன்ற சம்பிதாயங்களுக்கு முரணாக நேற்றைய தினம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – ஆடை அணிந்து வந்தமையினால், நேற்றைய தினம் சபையில் ஏற்பட்ட களேபரம் குறித்து நாம் அறிவோம். இந்த நிலையில் நாடாளுமன்றில் சம்பிரதாயங்களை மீறி கடந்த காலங்களில் ஆடை அணிந்து வந்த உறுப்பினர்கள் தொடர்பாக, சில தகவல்களைத் தொகுத்து டொக்டர் எஸ். கியாஸ்டீன்

மேலும்...
அதாஉல்லாவின் ஆடையும், ‘சுகமில்லாத’ வேலையும்

அதாஉல்லாவின் ஆடையும், ‘சுகமில்லாத’ வேலையும் 0

🕔22.Sep 2020

– மப்றூக் – நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணான வகையில் ஆடை அணிந்து வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்ட தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா – மீண்டும் சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. அதாஉல்லா அணிந்து வந்த ஆடை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்