பிரித்தானிய உயர் ஸ்தானிகள், றிசாட் சந்திப்பு

🕔 November 9, 2022

லங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (08) கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை குறித்தும், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைக்கான உதவிகளை வழங்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இக்கட்டான பொருளாதார நெருக்கடி காலங்களில் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கியமைக்காக உயர்ஸ்தானிகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்