தலைப்புச் செய்திகள்

‘வற் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றின் வியாக்கினத்தை சபாநாயகர் அறிவித்தார்

‘வற்’ (VAT) எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) அறிவித்தார்.

இந்த சட்டமூலத்தில் சில பகுதிகள் அரசியல் யாப்புக்கு முரணாக உள்ளமையை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருந்தபோதிலும் தேவையான திருத்தங்களுடன் அதனை முன்வைக்க முடியும் என, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர் கூறினார்.

இந்த சட்டமூலம் பிரதமரும், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.