
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பெறுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டே நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மாளிக்கைக்குள் இருந்து போராட்டக்காரர்களால் 17.8 மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையின் பொருட்டு இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி, மக்கள் நடத்திய பேராட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகைக்குள் நுளைந்த மக்கள் அங்கிருந்து குறித்த பணத்தை ஜுலை 09ஆம் திகதி கைப்பற்றினர்.
குறித்த பணம் பொலிலாரிடம் பின்னர் கைப்பற்றியவர்களால் ஒப்படைக்கப்பட்டது.



