சதொச நிறுவனத்தின் 300 விற்பனை நிலையங்களுக்கு மதுபான விற்பனை அனுமதி: கலால் திணைக்களம் ஏற்பாடு

🕔 November 11, 2022

நாடு முழுவதிலும் உள்ள 300 சதொச விற்பனை நிலையங்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு கலால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, மதுபான விற்பனையைப் பெறுவதற்கான விடயத்தை பூர்த்தி செய்த அனைத்து சதொச விற்பனை நிலையங்களுக்கும், உடனடியாக மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில சதொச விற்பனை நிலையங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாததாலும், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யாத சில சதொச விற்பனை நிலையங்களுக்கும், இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் உள்ளக வட்டாரங்கள் கூறுகின்றன.

கலால் ஆணையாளர் நாயகம் உரிய அனுமதிப்பத்திரங்களை அனுமதித்தவுடன், சதொச விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை, கலால் திணைக்களம் நாடு முழுவதும் சுமார் 6,000 மதுபான உரிமங்களை வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்