Back to homepage

பிரதான செய்திகள்

கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு

கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு 0

🕔11.Mar 2018

கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றிய தகவல்களை, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகரவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அதேவேளை, கண்டியில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விபரங்கள் தவறானவை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔8.Mar 2018

முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறினால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிரதமர்

மேலும்...
தாக்குதலின் பின்னணியில், கடந்த அரசாங்கம் பயன்படுத்திய முன்னாள் ராணுவத்தினரும் உள்ளனர்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

தாக்குதலின் பின்னணியில், கடந்த அரசாங்கம் பயன்படுத்திய முன்னாள் ராணுவத்தினரும் உள்ளனர்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு 0

🕔8.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் –முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதலின் பின்னனியில்,  கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படையினரும் உள்ளனர் என்றும், அவா்களையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் – ஜாதிக ஹெல உறுமய செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.ஜாதிக ஹெல உறுமய கட்சி

மேலும்...
ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம்

ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம் 0

🕔8.Mar 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபார ஸ்தலங்கள், வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை

மேலும்...
வெலகட பகுதியில் மர ஆலைகளுக்கு தீ வைப்பு; அமைச்சர் றிசாத் முயற்சியால், தீயணைப்பு படை களத்தில்

வெலகட பகுதியில் மர ஆலைகளுக்கு தீ வைப்பு; அமைச்சர் றிசாத் முயற்சியால், தீயணைப்பு படை களத்தில் 0

🕔7.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – கண்டி – வெலகட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மர ஆலைகளுக்கு இனவாதிகள் தீ வைத்துச் சென்றமையினால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்பதென்ன – பூஜாபிட்டிய வீதியில் அமைந்துள்ள வெலகட பகுதியில், சுமார் 04 மர ஆலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அமைச்சர் றிசாட் பதியுதீன்,

மேலும்...
கெகிராவ பகுதியிலும் தாக்குதல்; வட மத்திய மாகாணத்துக்கும் ‘தீ’ பரவுகிறது

கெகிராவ பகுதியிலும் தாக்குதல்; வட மத்திய மாகாணத்துக்கும் ‘தீ’ பரவுகிறது 0

🕔7.Mar 2018

– அஹமட் – கெகிராவ – ஒலுகரந்த எனும் பகுதியில் இனவாதத் தாக்குதல் சம்பவமொன்று, இன்று இரவு இடம்பெற்றுள்ளது. அதேவேளை அக்குரண – அம்பதான, வெலக்கட மற்றும் அரிசியால ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, அக்குரணயில் தாக்குதலை மேற்கொள்ள வந்த சிலரை, முஸ்லிம் இளைஞர்கள்  விரட்டியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கும் முஸ்லிம்

மேலும்...
குஹாகொட பகுதியில் சற்று முன்னர் இரு வீடுகள் மீது தாக்குதல்; தொடர்கிறது வெறியாட்டம்

குஹாகொட பகுதியில் சற்று முன்னர் இரு வீடுகள் மீது தாக்குதல்; தொடர்கிறது வெறியாட்டம் 0

🕔7.Mar 2018

– புதிது செய்தியாளர் – கண்டி – குஹாகொட பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் புதிது செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை, ஹரிஸ்பத்துவ – அங்குரதென்னபிரதேசத்தில் இன்று இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 வீடுகளும், ஒரு பள்ளிவாசலும் சேதமடைந்துள்ளன.

மேலும்...
பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து 0

🕔7.Mar 2018

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலில் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கிணங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மறு அறிவித்தல் வரை, பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேலும்...
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக, சந்திர ஜயதிலக நியமனம்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக, சந்திர ஜயதிலக நியமனம் 0

🕔7.Mar 2018

– எப். முபாரக் – கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக சந்திர ஜயதிலக இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்திர ஜெயதிலக்க, அம்பாறை மேல் நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் நீதவானாக கடமையாற்றியுள்ளார். கிழக்கு மாகாண பொதுச்சேவை

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்; சூத்திரதாரிகள் பேசும் வீடியோ அம்பலம்

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்; சூத்திரதாரிகள் பேசும் வீடியோ அம்பலம் 0

🕔7.Mar 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாதத் தாக்குதலுக்கு மஹசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோரே பிரதான காரணம் என நிரூபிக்கும் வகையிலான வீடியோ பதிவொன்று வெளியாகியுள்ளது. ஞானசார தேரரை அமித் வீரசிங்கவும் அவனின் கூட்டாளிகளும் சந்தித்து, முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பற்றி கலந்துரையாடிய தருணத்தில் மேற்படி வீடியோ

மேலும்...
காங்கேயனோடை வீடுகளுக்கு முன்னால், வெடிகுண்டுகள் மீட்பு: பெயர் எழுதப்பட்ட பதாகையும் கண்டெடுப்பு

காங்கேயனோடை வீடுகளுக்கு முன்னால், வெடிகுண்டுகள் மீட்பு: பெயர் எழுதப்பட்ட பதாகையும் கண்டெடுப்பு 0

🕔7.Mar 2018

காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளின் முன்பாக இன்று புதன்கிழமை காலை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளுக்கு முன்பாக, இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள், காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது, வீட்டுக்கு முன்பாக குண்டுகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்துக்கு

மேலும்...
இலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

இலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔7.Mar 2018

இலங்கையில் பேஸ்புக் பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். ஆயினும், மக்கள் தமது கருத்துக்களை டவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிடலாம் என அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் பேஸ்புக், இன்ஸ்ரகிறம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
சமூக வலைத்தளங்கள் வடி கட்டப்படுகின்றன: தெலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு

சமூக வலைத்தளங்கள் வடி கட்டப்படுகின்றன: தெலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 0

🕔7.Mar 2018

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்போது வடிகட்டப்படுவதாக (being filtered) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவதன் ஊடாக, மக்களிடையே பயத்தை உருவாக்குவதையும், இனநல்லுறவை சீர்குலைப்பதையும் தடுப்பதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், தற்போது இணைய வேகம்

மேலும்...
கொழும்பு – வாழைத்தோட்டத்தில் மனிதத் தலை மீட்பு

கொழும்பு – வாழைத்தோட்டத்தில் மனிதத் தலை மீட்பு 0

🕔7.Mar 2018

துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலையொன்று கொழும்பு – வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை, மேற்படி தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதியொன்றில் சுற்றப்பட்ட நிலையில், இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்...
மெனிக்ஹின்ன தாக்குதலில் ஈடுபட்ட 07 பேர் கைது; நால்வர் வெளியிடங்களைச் சேர்ந்தோர்

மெனிக்ஹின்ன தாக்குதலில் ஈடுபட்ட 07 பேர் கைது; நால்வர் வெளியிடங்களைச் சேர்ந்தோர் 0

🕔7.Mar 2018

மெனிக்ஹின்ன பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு வன்முறையில்  07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். மேற்பேடி  07 பேரில் நால்வர் மெனிக்ஹின்ன பகுதியை தவிர்ந்த பிற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்