இலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

🕔 March 7, 2018

லங்கையில் பேஸ்புக் பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

ஆயினும், மக்கள் தமது கருத்துக்களை டவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிடலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் பேஸ்புக், இன்ஸ்ரகிறம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்