சமூக வலைத்தளங்கள் வடி கட்டப்படுகின்றன: தெலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு

🕔 March 7, 2018

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்போது வடிகட்டப்படுவதாக (being filtered) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவதன் ஊடாக, மக்களிடையே பயத்தை உருவாக்குவதையும், இனநல்லுறவை சீர்குலைப்பதையும் தடுப்பதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், தற்போது இணைய வேகம் கடுமையாக வீழ்ச்சிடைந்துள்ளதோடு, இணையப் பாவனையில் கடும் இடைஞ்சல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்