பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

🕔 March 8, 2018

முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறினால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிரதமர் தீர்வு வழங்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் பட்சத்தில், அதற்கு ஆதரவாக நாங்கள் வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்படுவோம் எனவும் அவர் கூறினார்.

ஒரு சிறிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை, அரசாங்கத்தினால் ஏன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

கண்டியில் நடைபெறும் தாக்குதல்களும், கலவரங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்