முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்; சூத்திரதாரிகள் பேசும் வீடியோ அம்பலம்

🕔 March 7, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாதத் தாக்குதலுக்கு மஹசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோரே பிரதான காரணம் என நிரூபிக்கும் வகையிலான வீடியோ பதிவொன்று வெளியாகியுள்ளது.

ஞானசார தேரரை அமித் வீரசிங்கவும் அவனின் கூட்டாளிகளும் சந்தித்து, முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பற்றி கலந்துரையாடிய தருணத்தில் மேற்படி வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞானசார தேரருடன், அமித் வீரசிங்க கூறுகையில்;

“பொலிஸார் 250 அல்லது 300 பேருக்கும் அதிகமாக அங்கு நிற்பதால் தாக்குதலை தற்பொழுது நிறுத்துவோம். நாளை மறுதினம் மீண்டும் சேர்ந்து கண்டியில் எங்காவது தாக்குவோம்.

நீங்கள் சிறைக்குப் போனால் காப்பாற்ற யாரும் இல்லை.  நாங்கள் இன்று அம்பாறையைச் சேர்ந்த வர்த்தகரிடம் 500 உணவுப் பார்சல்களை கடனுக்கு, அழுது புலம்பித்தான் கேட்டுப் பெற்றோம். எங்களிடமும் பணம் இல்லை, அமைப்பிலும் பணம் இல்லை.

நாம் பிடிபட்டால்,  பிணையில் எடுப்பதற்கு இந்த ஊரில் ஒருவர் தேவை. ஆனால் இது முஸ்லிம் ஊர் என்பதால், எங்களை பிணையில் எடுக்க யாரும் இங்கு இல்லை.

பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் செய்யும் போது, நமது ஆட்கள் ஓடி விடுகிறார்கள். எனவே, அதிலிருந்தும் நம்மை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எழுக்க வேண்டும். அப்படி ஓடுபவர்கள் பிடிபட்டால் – பிடித்து சிறையில் போடுவார்கள். ஆகவே, நாங்கள் பிடிபடாமல் பாதுகாப்பாக இருந்தால்தான், களத்தில் நிற்கலாம்.

நாங்கள் இன்னும் பலமாக இருப்பதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு அமைப்பு வேண்டும்” எனத் தெரிவித்துள்ளான்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்