வெலகட பகுதியில் மர ஆலைகளுக்கு தீ வைப்பு; அமைச்சர் றிசாத் முயற்சியால், தீயணைப்பு படை களத்தில்

🕔 March 7, 2018

– முன்ஸிப் அஹமட் –

ண்டி – வெலகட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மர ஆலைகளுக்கு இனவாதிகள் தீ வைத்துச் சென்றமையினால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பதென்ன – பூஜாபிட்டிய வீதியில் அமைந்துள்ள வெலகட பகுதியில், சுமார் 04 மர ஆலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அமைச்சர் றிசாட் பதியுதீன், தீயணைக்கும் படையினருக்கு அறிவித்தமையினை அடுத்து, தற்போது அங்கு வந்து சேர்ந்துள்ள தீயமைணக்கும் படையினர், தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயணைக்கும் படையினரும் ஆரம்பத்தில் பாதுகாப்பு அச்சம் தொடர்பில் சம்பவ இடத்துக்கு வரத் தயங்கியதாகவும், பின்னர் – பொலிஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் றிசாட் தொடர்பு கொண்டமையினை அடுத்தே, உரிய இடத்துக்கு தீயணைப்புப் படையினர் வந்து சேர்ந்ததாகவும அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீயை அணைக்காமல் விட்டிருந்தால், ஏனைய பகுதிகளுக்கும் தீ பரவி, பாரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என, அங்கிருப்போர் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்