கெகிராவ பகுதியிலும் தாக்குதல்; வட மத்திய மாகாணத்துக்கும் ‘தீ’ பரவுகிறது

🕔 March 7, 2018

– அஹமட் –

கெகிராவ – ஒலுகரந்த எனும் பகுதியில் இனவாதத் தாக்குதல் சம்பவமொன்று, இன்று இரவு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை அக்குரண – அம்பதான, வெலக்கட மற்றும் அரிசியால ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, அக்குரணயில் தாக்குதலை மேற்கொள்ள வந்த சிலரை, முஸ்லிம் இளைஞர்கள்  விரட்டியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் மற்றும் பௌத்த சமயத் தலைவர்கள் ஆகியோருகும் இடையில்,  இன்றைய தினம் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்ற நிலையிலேயே, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஓயாமல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments