குஹாகொட பகுதியில் சற்று முன்னர் இரு வீடுகள் மீது தாக்குதல்; தொடர்கிறது வெறியாட்டம்

🕔 March 7, 2018

– புதிது செய்தியாளர் –

ண்டி – குஹாகொட பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் புதிது செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, ஹரிஸ்பத்துவ – அங்குரதென்னபிரதேசத்தில் இன்று இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 வீடுகளும், ஒரு பள்ளிவாசலும் சேதமடைந்துள்ளன.

இதனால், அங்குள்ள பாடசாலையொன்றில் சுமார் 500 பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும்,  அவர்கள் தமக்கான உணவினைக் கூட, பெற்றுக்கொள்ள முடியா நிலையில் இருப்பதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாள் சுஐப் மேலும் கூறினார்.

இதேவேளை, உக்குரஸ்பிட்டிய மற்றும் அக்குரண 04ஆம் கட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று இனவாதிகள் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையிலும், இனவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்தவாறு உள்ளமையினால், கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேச மக்கள், கடுமையான அச்சத்தில் உறைந்து போயுள்ளனர் எனவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் தெரிவித்தார்.

இந்த நிலையில், மக்கள் பாதிக்கப்பட்ட மேற்படி பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் விஜயம் செய்து, களநிலைவரங்களை அறிந்து கொண்டதோடு, தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆர். இஸ்ஹாக் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகோரும் சென்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்