Back to homepage

பிரதான செய்திகள்

இலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

இலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔7.Mar 2018

இலங்கையில் பேஸ்புக் பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். ஆயினும், மக்கள் தமது கருத்துக்களை டவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிடலாம் என அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் பேஸ்புக், இன்ஸ்ரகிறம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
சமூக வலைத்தளங்கள் வடி கட்டப்படுகின்றன: தெலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு

சமூக வலைத்தளங்கள் வடி கட்டப்படுகின்றன: தெலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 0

🕔7.Mar 2018

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்போது வடிகட்டப்படுவதாக (being filtered) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவதன் ஊடாக, மக்களிடையே பயத்தை உருவாக்குவதையும், இனநல்லுறவை சீர்குலைப்பதையும் தடுப்பதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், தற்போது இணைய வேகம்

மேலும்...
கொழும்பு – வாழைத்தோட்டத்தில் மனிதத் தலை மீட்பு

கொழும்பு – வாழைத்தோட்டத்தில் மனிதத் தலை மீட்பு 0

🕔7.Mar 2018

துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலையொன்று கொழும்பு – வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை, மேற்படி தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதியொன்றில் சுற்றப்பட்ட நிலையில், இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்...
மெனிக்ஹின்ன தாக்குதலில் ஈடுபட்ட 07 பேர் கைது; நால்வர் வெளியிடங்களைச் சேர்ந்தோர்

மெனிக்ஹின்ன தாக்குதலில் ஈடுபட்ட 07 பேர் கைது; நால்வர் வெளியிடங்களைச் சேர்ந்தோர் 0

🕔7.Mar 2018

மெனிக்ஹின்ன பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு வன்முறையில்  07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். மேற்பேடி  07 பேரில் நால்வர் மெனிக்ஹின்ன பகுதியை தவிர்ந்த பிற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம்

கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம் 0

🕔7.Mar 2018

கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்த்தினை பொலிஸார் அமுல் செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் அங்கு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை கடுமையாக முன்னெடுக்கப்படும் என்றும்

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும், அந்த 05 நபர்கள்: ‘சாமி’களும், ஆசாமிகளும்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும், அந்த 05 நபர்கள்: ‘சாமி’களும், ஆசாமிகளும் 0

🕔7.Mar 2018

இலங்கையில் கடந்த 07ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக 05 நபர்களே முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றனர். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரா், மங்களராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர்,  மஹாசேன பலகாய அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க, டான் பிரியசாத் மற்றும் சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த  சாலிய ரணவக ஆகிய 05 நபர்களே, முஸ்லிம்கள்

மேலும்...
பாதுகாப்பு துறையினர் மீது, முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்: மு.கா. தலைவர்

பாதுகாப்பு துறையினர் மீது, முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்: மு.கா. தலைவர் 0

🕔6.Mar 2018

கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில்

மேலும்...
வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில், காடையர்கள் டயர் எரிப்பு; பிரதேசத்தில் பதட்டம்

வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில், காடையர்கள் டயர் எரிப்பு; பிரதேசத்தில் பதட்டம் 0

🕔6.Mar 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டம் வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச எல்லைப் பகுதியில் சிங்களக் காடையர்கள் டயர் ஒன்றினை எரித்தமையினால், அங்கு தற்போது பதட்டமானதொரு சூழ்நிலை காணப்படுவதாகத் தெரியவருகிறது. வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில் டயர் ஒன்றினை எரித்துள்ளனர். இதனையடுத்து, தற்போது வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்கள் தற்போது வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில்

மேலும்...
மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தீவைப்பு; எலுகொட பள்ளிவாசல் மீது தாக்குதல்

மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தீவைப்பு; எலுகொட பள்ளிவாசல் மீது தாக்குதல் 0

🕔6.Mar 2018

கண்டி – மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தற்போது செவ்வாய்கிழமை இரவு, சிங்க காடையர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற தெல்தெனிய மற்றும் திகன ஆகிய இடங்களுக்கு அருகாமையில் மெனிக்கின்ன அமைந்துள்ளது. இதேவேளை, பேராதனை – எலுகொட பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. தற்போது, கண்டி

மேலும்...
முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கும் நிலைவரத்தை உருவாக்கி விடக்கூடாது: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் ஆவேசம்

முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கும் நிலைவரத்தை உருவாக்கி விடக்கூடாது: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் ஆவேசம் 0

🕔6.Mar 2018

  முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும்

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம் 0

🕔6.Mar 2018

– அகமட் எஸ். முகைடீன் –திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபை அமர்வு நடைபெறும்போது அதனைப் புறக்கணிக்கும் வகையில் நிலத்தில் அமர்ந்து கோசமிட்டவர்களாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட திகன பிரதேசத்துக்குச் சென்று, அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையினை கண்ணுற்ற பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இந்த

மேலும்...
வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர்

வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர் 0

🕔6.Mar 2018

வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களே தெல்தெனிய மற்றும் திகன உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும்,  பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது தவறான கருத்து எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “தெல்தெனிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை

மேலும்...
கலவரம் தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கு குரல்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம்; ஆவண சேகரிப்புக்காக சான்றுகளையும் அனுப்புங்கள்

கலவரம் தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கு குரல்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம்; ஆவண சேகரிப்புக்காக சான்றுகளையும் அனுப்புங்கள் 0

🕔6.Mar 2018

– மப்றூக்- நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரம் அம்பாறையிலும், நேற்றைய தினம் கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட கலவரம் தொடர்பில், இலவசமான சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு, குரல்கள் இயக்கம் சார்பான சட்டத்தரணிகள் தயாராக உள்ளனர். எனவே, கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நாட்டின் எப்பகுதியில் இருந்தாலும், குரல்கள் இயக்கம் சார்பான சட்டத்தரணிகளை அவர்கள்

மேலும்...
வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு

வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2018

தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரையுமே், இம் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்குமாறு கோரி நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட

மேலும்...
அடுத்து வரும் 10 நாட்களுக்கு, நாட்டில் அவசரகால நிலை; ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என, அமைச்சர் தகவல்

அடுத்து வரும் 10 நாட்களுக்கு, நாட்டில் அவசரகால நிலை; ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என, அமைச்சர் தகவல் 0

🕔6.Mar 2018

நாட்டில் அடுத்து வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார் ஜனாதிபதியுடன் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்தத் தகவலை அமைச்சர் கூறினார். மேற்படி சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அவசரகால நிலயை 10 நாட்களுக்கு  பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்