வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில், காடையர்கள் டயர் எரிப்பு; பிரதேசத்தில் பதட்டம்

🕔 March 6, 2018

– அஹமட் –

ம்பாறை மாவட்டம் வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச எல்லைப் பகுதியில் சிங்களக் காடையர்கள் டயர் ஒன்றினை எரித்தமையினால், அங்கு தற்போது பதட்டமானதொரு சூழ்நிலை காணப்படுவதாகத் தெரியவருகிறது.

வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில் டயர் ஒன்றினை எரித்துள்ளனர். இதனையடுத்து, தற்போது வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்கள் தற்போது வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் ஒன்று திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், எரிக்கப்பட்ட டயரை பொலிஸார் அணைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இருந்தபோதும், எல்லைப் பகுதியிலுள்ள மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்