கலவரம் தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கு குரல்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம்; ஆவண சேகரிப்புக்காக சான்றுகளையும் அனுப்புங்கள்

🕔 March 6, 2018

– மப்றூக்-

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரம் அம்பாறையிலும், நேற்றைய தினம் கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட கலவரம் தொடர்பில், இலவசமான சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு, குரல்கள் இயக்கம் சார்பான சட்டத்தரணிகள் தயாராக உள்ளனர்.

எனவே, கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நாட்டின் எப்பகுதியில் இருந்தாலும், குரல்கள் இயக்கம் சார்பான சட்டத்தரணிகளை அவர்கள் தொடர்பு கொண்டு, ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய சடத்தரணிகளின் தொலைபேசி இலக்கங்கள்;

  1. முகைமீன் காலித் – 0777876007
  2. றதீப் அஹமட் – 0772147175
  3. றுஸ்தி ஹஸன் – 0770080036
  4. அஸ்ஹர் லதீப் – 0770533090

இதேவேளை, கலவரங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஆவணப்படுத்துவதற்கும், குரல்கள் இயக்கம் முன்வந்துள்ளது.

இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து தகவல்களை அவர்கள் கோருகின்றனர்.

எனவே, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்கள் தொடர்பான படங்கள், வீடியோகள் மற்றும் ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட அனைத்து விதமான சான்றுகளையும் 0775363835 எனும் இலக்கத்துக்கு வட்ஸ்ஸப் மூலம் அனுப்பி வைக்குமாறும் குரல்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்