முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும், அந்த 05 நபர்கள்: ‘சாமி’களும், ஆசாமிகளும்

🕔 March 7, 2018

லங்கையில் கடந்த 07ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக 05 நபர்களே முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றனர்.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரா், மங்களராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர்,  மஹாசேன பலகாய அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க, டான் பிரியசாத் மற்றும் சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த  சாலிய ரணவக ஆகிய 05 நபர்களே, முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு முன்னிலை வழங்கி வருகின்றனர்.

நாடுபூராவும்  இவா்கள் சிறு குழுக்களை அழைத்துக் கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயினும் இவா்களுக்கு எதிராக இதுவரை சொல்லிக் கொள்ளும் வகையில்,  எவ்வித சட்டம்  நடவடிக்கையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தலையெடுத்த இவர்கள், தற்போதும் அதே பலத்துடன் இயங்குகின்றனா்.

பாதுகாப்பு படையினா் முன்னிலையிலேயே, இவர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியமையை பல சந்தர்ப்பங்களில் காணக் கிடைத்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக துவேசத்துடன் பேசுவதோடு, முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்ககளை நடத்துவதற்கும், இவர்கள் தலைமை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments