
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன – தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பார் என, நீதிமன்றில், கனிஷ்க விஜேரத்னவின் சட்டத்தரணி உதித இகலஹேவா உறுதியளித்தார்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக – கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்களைத் தொடர்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, அவர் ராஜிநாமா செய்வார் என நீதிமன்றுக்கு உறுதியளிக்கப்பட்டது.



