தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட முத்திரைகள் ரத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட முத்திரைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் சகல தபால் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வருடாந்தம் 03 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முத்திரைகள் வழங்கப்படுவது வழமையாகும்.