தலைப்புச் செய்திகள்

மொட்டிலிருந்து பிரிந்து வந்தோர் காஸ் சிலின்டரில் போட்டி: உறுதிப்படுத்தினார் கஞ்சன

பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ‘பொதுஜன எக்சத் நிதஹஸ் பெரமுன’ எனும் கட்சி – புதிய ஜனநாயக முன்னணியின் கீழ், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இணைந்து ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (07) பேசிய முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுஜன எக்சத் நிதஹஸ் பெரமுன – பரந்த கூட்டணியை அமைத்து, அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் என உறுதிப்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் சக்திகளும், இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என விஜேசேகர இதன்போது கூறினார்.

இருந்தபோதிலும், எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைந்து, ‘பொதுஜன எக்சத் நிதஹஸ் பெரமுன’ போட்டியிடாது எனவும் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.