தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

ஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சில பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது – அவர் இதனைக் கூறினார்.

அந்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பதும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்து பக்கங்களும் அப்படியே உள்ளதா என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.