Back to homepage

Tag "பொதுத் தேர்தல்"

தேர்தல் போட்யிலிருந்து சஜித் அணியின் மற்றொரு வேட்பாளரும் விலகல்

தேர்தல் போட்யிலிருந்து சஜித் அணியின் மற்றொரு வேட்பாளரும் விலகல் 0

🕔12.Jun 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலுகா ஏக்கநாயக்க, போட்டியில் இருந்து விலகியுள்ளார். ரத்தினபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்புமனுவை நிலுகா ஏக்கநாயக்க தாக்கல் செய்திருந்தார். இவர் – மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய மக்கள்

மேலும்...
10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை

10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை 0

🕔11.Jun 2020

சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் பிரகாரம், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியுமென யாராவது நினைப்பார்களாயின், அவ்வானவர்களுக்குத் தேர்தல் தொடர்பில் துளியளவேனும் புரிதல் இல்லையென, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும் ஊவா மாகாண முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். அதனைவிடவும், வாக்குப் பெட்டிகளைக் கட்சிக் காரியாலயங்களுக்கு அனுப்பிவைத்து

மேலும்...
பொதுத் தேர்தல்: அம்பாறை மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 540 பேர் போட்டி

பொதுத் தேர்தல்: அம்பாறை மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 540 பேர் போட்டி 0

🕔10.Jun 2020

அம்பாறை மாவட்டத்தில் 07 நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் ஒவ்வொரு அணியும் 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும். இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு;  நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு; நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல் 0

🕔12.May 2020

பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அரசியல் கட்சிகளிடன் பிரதிநிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர இது தொடர்பில்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்களை, 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்களை, 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔11.May 2020

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுப்படியற்றது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல்கள் மனுக்களையும் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமைதீர்மானித்துள்ளது. மேற்படி நாட்களில் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 04

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔9.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை

மேலும்...
பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம்: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம்: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா 0

🕔9.May 2020

– நூருல் ஹுதா உமர் – “தொடர் ஊரடங்கு சட்டம் அமுலாகும் போது அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது என்பதை பற்றி மக்கள் சிந்திக்கும் போது தேர்தல் இக்காலத்தில் முக்கியமான ஒன்றல்ல. அண்மையில் இந்த நாடு ஒரு தேர்தலை எதிர்நோக்கி மக்கள் அமோகமாக வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தேர்தெடுத்துள்ளார்கள். பின்னர் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு

பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு 0

🕔8.May 2020

பொதுத் தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 11, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்க செய்யுமாறு ஐக்கிய மக்கள்

மேலும்...
தேர்தலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு மனு

தேர்தலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு மனு 0

🕔6.May 2020

பொதுத்தேர்தலை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஓர் அடிப்படை உரிமை மனு இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம் – இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி, இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல்

மேலும்...
தப்புக் கணக்கு

தப்புக் கணக்கு 0

🕔5.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு – சூட்டோடு சூடாக பொதுத் தேர்தலையும் நடத்தி முடித்து விட வேண்டுமென நினைத்த பொதுஜன பெரமுனவினரின் விருப்பம் சற்றே தூரப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலையால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி, பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாமல் போயுள்ளமை, ஆளும் பொதுஜன

மேலும்...
மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔29.Apr 2020

மே மாதம் 15ம் திகதிக்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுகை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர்

மேலும்...
மே 28 இல் பொதுத் தேர்தல்; உடன்படப் போவதில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹுல் தெரிவிப்பு

மே 28 இல் பொதுத் தேர்தல்; உடன்படப் போவதில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹுல் தெரிவிப்பு 0

🕔20.Apr 2020

பொதுத்தேர்தலை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு தான் உடன்படப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றில் ஊடாக இந்த விடயத்தை அவர் தெரியப்படுத்தியுள்ளார். இதேவேளை, பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய 0

🕔20.Apr 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ள நிலையில், அதற்கான மாற்றுத் திகதியொன்றை முடிவு செய்வதற்கான அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக

மேலும்...
பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை 0

🕔17.Apr 2020

இலங்கையில் கொவிட்–19 தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் சுமூகமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால், அது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை பெரிதும் பாதிக்கும் என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
அவசர தேர்தல்,  அனைவரின் அர்ப்பணிப்புக்களையும் வீண் விரயமாக்கி விடும்: மங்கள

அவசர தேர்தல், அனைவரின் அர்ப்பணிப்புக்களையும் வீண் விரயமாக்கி விடும்: மங்கள 0

🕔15.Apr 2020

அவசரமான தேர்தலை நடத்துவது கடந்த ஒரு மாத காலமாக இலங்கையின் அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தை வீண் விரயமாக்கும் நடவடிக்கை என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை 100 வீதம் கட்டுப்படுத்தும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்