தேர்தல் போட்யிலிருந்து சஜித் அணியின் மற்றொரு வேட்பாளரும் விலகல்

🕔 June 12, 2020

ஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலுகா ஏக்கநாயக்க, போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ரத்தினபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்புமனுவை நிலுகா ஏக்கநாயக்க தாக்கல் செய்திருந்தார்.

இவர் – மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த மூன்று பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இவர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர முக்கியமானவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்