பொதுத் தேர்தல்: அம்பாறை மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 540 பேர் போட்டி

🕔 June 10, 2020

ம்பாறை மாவட்டத்தில் 07 நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் ஒவ்வொரு அணியும் 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டணியாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்