நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார்.
மாத்தளை மாவட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இன்றைய தினம் சந்திப்பொன்றை நடத்திய போது, இந்த முடிவை அவர் வெளியிட்டார்.
அதன்படி, வரவிருக்கும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தனது இலக்கத்துக்கு வாக்குகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் மாத்தறை மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் தேர்தல் பட்டியலில் அவருடைய பெயர், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இன்று நான் நாடாளுமன்ற தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன். உங்கள் விருப்பு வாக்குகளை எனக்கு வழக்க வேண்டாம்” என்று மங்கள இதன்போது கூறினார்.
இதேவேளை தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தனது முடிவு குறித்து மங்கள கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.