Back to homepage

மட்டக்களப்பு

மு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள  ஏறாவூர் நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் படுதோல்வி

மு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் படுதோல்வி 0

🕔12.Oct 2020

முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகரசபைக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ. அப்துல் வாசித், 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இன்று திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்த பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதனை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள் உட்பட 12 பேர் வாக்களித்தனர். குறித்த

மேலும்...
மாடறுப்புத் தடையின் பின்னாலுள்ள பூகோள அரசியல் குறித்து, பஷீர் சேகுதாவூத் கருத்து

மாடறுப்புத் தடையின் பின்னாலுள்ள பூகோள அரசியல் குறித்து, பஷீர் சேகுதாவூத் கருத்து 0

🕔13.Sep 2020

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்வதினால் இந்தியாவிற்கு ஏற்படுகின்ற கோபத்தை மாடறுப்புத் தடை எனும் விடயத்தினால் சமப்படுத்தலாம் என அரசாங்கம் எண்ணுகிறது என்றும், அதுதான் பூகோள அரசியல் எனவும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி 0

🕔18.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொள்வதற்கு பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலின் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், இம்முறை பொதுத் தேர்தலில், சிறைக்குள் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றியீட்டினார். இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் முதல்

மேலும்...
பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார்

பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார் 0

🕔31.Jul 2020

– அஹமட் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை – தமது அமைப்பு ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக காத்தான்குடியை தளமாகக் கொண்டியங்கும் ‘அகில இலங்கை ஷுபி ஜம்மியத்துல் உலமா’வின் தலைவர் ரஊப் மௌலவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுத்துமூல அறிவிக்கை ஒன்றினையும்

மேலும்...
ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசுவோர், சமூக பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க செயற்படுகின்றனர்: றிசாட் விசனம்

ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசுவோர், சமூக பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க செயற்படுகின்றனர்: றிசாட் விசனம் 0

🕔30.Jul 2020

இருப்பு, ஒற்றுமை தொடர்பில் வாய்கிழியப் பேசிக் கொண்டிருப்போர், கல்குடாவின் சமூகப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது இல்லாமலாக்கிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலியை ஆதரித்து, நேற்று வியாழக்கிழமை மாலை ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔27.Jul 2020

– சரவணன் – ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 10 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். வீடியோ மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்...
மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் அணிகளிடையே மோதல்: துண்டுப் பிரசுரங்களுடன் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றினர்

மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் அணிகளிடையே மோதல்: துண்டுப் பிரசுரங்களுடன் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றினர் 0

🕔24.Jul 2020

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட் அணியினருக்கும், ஹபீப் றிபான் அணியினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற நிலையில், ஹாபிஸ் நஸீரின் பிரசாரத்தில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வாழைச்சேனை – பிறைந்துறைசச்சேனை பகுதியில் நேற்று இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வேட்பாளர் ஹாபிஸ் நஸீரின் துண்டுப் பிரசுரங்கள்

மேலும்...
மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்: கட்சியின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் பல்டி

மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்: கட்சியின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் பல்டி 0

🕔22.Jul 2020

– அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொள்ளும் என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். “மஹிந்த ராஜபக்ஷவுடனும், ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
ஹாபிஸ் நசீர் ஒரு டம்மி: மு.கா. தலைவரை வைத்துக் கொண்டு, விளாசித் தள்ளிய அலிசாஹிர் மௌலானா: ஏறாவூரில் சம்பவம்

ஹாபிஸ் நசீர் ஒரு டம்மி: மு.கா. தலைவரை வைத்துக் கொண்டு, விளாசித் தள்ளிய அலிசாஹிர் மௌலானா: ஏறாவூரில் சம்பவம் 0

🕔9.Jul 2020

– முன்ஸிப் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஹாபிஸ் நஸீரை, ஒரு ‘டம்மி’ என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்பாக, அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றொரு வேட்பாளரான அலிசாஹிர் மௌலானா சாடினார். அலிசாஹிர் மௌலானாவின் ஏறாவூர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே,

மேலும்...
சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔18.May 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைதானவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டதுடன் நீதிமன்ற  பிணையில் சென்று

மேலும்...
காத்தான்குடி தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தோரில் 55 பேர் சொந்த இடம் திரும்பினர்

காத்தான்குடி தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தோரில் 55 பேர் சொந்த இடம் திரும்பினர் 0

🕔10.May 2020

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 62 நோயாளிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 55 பேர் உடல் நலம் முழுமையாக குணமடைந்த நிலையில் ராணுவத்தினரின் உதவியுடன் இரண்டு பஸ்கள் மூலம் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ்

மேலும்...
சஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் சுற்றி வளைப்பு

சஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் சுற்றி வளைப்பு 0

🕔8.May 2020

– பழுலுல்லாஹ் பர்ஹான் – ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிம் குழுவின் – மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றினை, குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை சுற்று வளைத்துத் தேடுதல் நடத்தினார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி – செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை

மேலும்...
காத்தான்குடியில் கைத்தொலைபேசி திருடியவர் மற்றும் அதனைக் கொள்வனவு செய்த இருவருக்கும் விளக்க மறியல்

காத்தான்குடியில் கைத்தொலைபேசி திருடியவர் மற்றும் அதனைக் கொள்வனவு செய்த இருவருக்கும் விளக்க மறியல் 0

🕔26.Apr 2020

– முன்ஸிப் – காத்தான்குடியில் மதரஸா கட்டட நிர்மாண வேலைகள் நடக்கும் இடமொன்றில் நுழைந்து பெறுமதியான கைத் தொலைபேசி மற்றும் பணம் உள்ளிட்ட ஆவணங்கள் கொண்ட ‘பேர்ஸ்’ ஆகியவற்றை திருடிய நபரையும், அந்த நபரிடமிருந்து குறித்த கைத் தொலைபேசியை கொள்வனவு செய்த நபரையும் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு

மேலும்...
போதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு

போதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு 0

🕔28.Mar 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் – அத்தியவசியப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றி வந்த தனது லொறியின் சாரதியும் உதவியாளர்களும், போதைப் பொருட்களை வைத்திருந்த கீழ்தரமான செயலுக்கும் தனக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது என்று, அந்த லொறியின் உரிமையாளரான காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மக்பூல் ஹாஜியார் தெரிவித்தார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றுக் கொண்டு

மேலும்...
அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது

அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது 0

🕔27.Mar 2020

– கனகராசா சரவணன் – கொழும்பில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்துக்கு அத்தியவசிய பொருட்களைக் கொண்டு சென்ற லொறியிலிருந்து ஜஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் ஆகியவற்றினை இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றிய வாழைச்சேனைப் பொலிஸார்; லொறியின் சாரதி உள்ளிட்ட மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர். கொழும்பில் அத்தியவசிய பொருட்களை நேற்று வியாழக்கிழமை ஏற்றிக் கொண்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்