பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார்

🕔 July 31, 2020

– அஹமட் –

டைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை – தமது அமைப்பு ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக காத்தான்குடியை தளமாகக் கொண்டியங்கும் ‘அகில இலங்கை ஷுபி ஜம்மியத்துல் உலமா’வின் தலைவர் ரஊப் மௌலவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எழுத்துமூல அறிவிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

அதில்; ‘ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் பஷீர் சேகுதாவூத் அவர்களை நாம் ஆதரிப்பதென முடிவு செய்தமைக்கும், அதே கட்சியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களையோ அல்லது வேறு கட்சிகளில் போட்டியிடும் நபர்களையோ ஆதரிப்பதில்லை என முடிவு செய்தமைக்கும், அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும், அவ்லியாக்களும் பொருந்திக் கொள்ளக் கூடிய பொருத்தமான காரணங்கள் உள்ளன’ என்று, ரஊப் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தில் வண்ணத்துப் பூச்சி சின்னம், 04ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்றார்.

Comments