
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட் அணியினருக்கும், ஹபீப் றிபான் அணியினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற நிலையில், ஹாபிஸ் நஸீரின் பிரசாரத்தில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வாழைச்சேனை – பிறைந்துறைசச்சேனை பகுதியில் நேற்று இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வேட்பாளர் ஹாபிஸ் நஸீரின் துண்டுப் பிரசுரங்கள் இருந்த இரண்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆகிய இருவரின் ஆதரவாளர்களுக்கிடையில் கைக்கலப்பு ஏற்பட்டமை காரணமாக அவ்விடத்திற்கு வந்த பொலிஸாரை கண்டதும் சம்பந்தப்பட்ட நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.



