அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது

🕔 March 27, 2020

– கனகராசா சரவணன் –

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்துக்கு அத்தியவசிய பொருட்களைக் கொண்டு சென்ற லொறியிலிருந்து ஜஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் ஆகியவற்றினை இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றிய வாழைச்சேனைப் பொலிஸார்; லொறியின் சாரதி உள்ளிட்ட மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் அத்தியவசிய பொருட்களை நேற்று வியாழக்கிழமை ஏற்றிக் கொண்டு குறித்த லொறி – மட்டக்களப்பு மாவட்டத்தை இன்று வந்தடைந்தது.

இதன்போது குறித்த லொறியை வாழைச்சேனை சோதனைச் சாவடியில் நிறுத்திய பொலிஸார்; அதனை பொலிஸ் நிலையத்துக்குள் கொண்டு சென்று, பொருட்களை இறக்கி சோதனை செய்தனர்.

அப்போது, குறித்த லொறியில் 13 கிராம் 20 மில்லிலீற்றர் ஜஸ்போதைப் பொருள், 06 கிராம் 960 மில்லிக்கிராம் கஞ்சா, 104 மில்லிக்கிராம் ஹரோயின் ஆகியவற்றினை பொலிஸார் கைப்பற்றியதுடன், லொறி சாரதி மற்றும் இரண்டு உதவியாளர்களையும் கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments