நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

🕔 August 18, 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொள்வதற்கு பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலின் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், இம்முறை பொதுத் தேர்தலில், சிறைக்குள் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை மறுதினம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் தனது கட்சின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments