மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு
மரண தண்டனையை, நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் – அடுத்த வருடம் முதல், மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி மாநகரசபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, தேசிய மது ஒழிப்புத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். நாட்டில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கொலைச் சம்பவங்களையடுத்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும்