படையினர் ஆக்கிரமித்த காணிகளின் விபரங்கள், மு.கா. தலைவரிடம் கையளிப்பு

🕔 April 29, 2017

– சபீக் ஹுசைன் –

ன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை கடற்படை முகாம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிலாவத்துறை கடற்படை முகாமை இடமாற்றக்கோரி, நாடாளுமன்றஉறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் பிரதமரிடம் சபையில் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

சித்திரை புதுவருடத்தின் பின்னர் இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேசுவதாக பிரதமர் பதிலளித்தார். இதற்கமைய, கடற்படை முகாம் மூலம் காணிகளை இழந்த மக்களின் ஆவணங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் சேகரித்து, அவற்றை அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளித்தார். இந்த ஆவணங்களை அமைச்சர் ஹக்கீம் பிரதமரிடன் கைளிப்பார் எனத் தெரிவிக்கப்டுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்