நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 April 29, 2017

நீருக்கான கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

“நீர் வழங்கல் முகாமைத்துவ திணைக்களத்துக்கு திறைசேரி நிதி வழங்குவதில்லை. உங்களுடைய கடனை நீங்களே செலுத்துங்கள் என்று திறைசேரி கூறுகிறது. இதனால், நீருக்கான கட்டணைத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. இதனை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும்” என அமைச்சர் இதன்போது விபரித்தார்.

எவ்வாறாயினும், நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க முற்படும்போது, பாரிய அநீதியிழைக்கப்படுவதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

ஆனாலும், நீர் வழங்கல் திணைக்களத்தை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, நீருக்கான கட்டணத்தில் அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பாக விரையில் தீர்மானமொன்றுக்கு வரவேண்டியுள்ளது என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments