கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை, ஐ.தே.க. கவனிக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க

🕔 April 28, 2017

திர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற வேண்டுமானால் கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை கவனிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அக்கட்சியுடன் இணைந்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற வேண்டுமானால் கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை கவனிக்க வேண்டும். நான் பாரம்பரிய ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளன். ஆனால் தற்போதுள்ள ஆதரவாளர்களை நினைத்து நான் வேதனைப்படுகின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சிக்காக எனது வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை அர்ப்பணித்துள்ளேன். உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் கட்சியுடன் இணைவது தொடர்பில் தீர்மானிப்பேன்”  என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்